+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரை…

தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி 100% பள்ளி அளவில் பாட அளவில் தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள், மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு Dr. K.R. நந்தகுமார் மற்றும் மாநில துணை தலைவர் “Gem of India” Dr. J. B.விமல் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

+2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும் என் உயிரினும் மேலான மாணவ கண்மணிகளுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் அவர்கள் உயர் கல்வி தொடர தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ஒரு பைசா கூட நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்வதற்கு பரிந்துரை செய்கின்றோம்….

மாணவக் கண்மணிகள் பெரும் தொகையையும் நன்கொடையையும் கொடுத்து ஏமாறாமல் படித்து முடித்து, கல்லூரி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வரும்போதே நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கான ஆணையும் வழங்கப்படும்.

உங்கள் பள்ளியில் 100% வெற்றி பெற உழைத்த நல்லாசிரியர் களுக்கு பள்ளி திறந்தவுடன் நல்லாசிரியர் விருதும்…

சிறந்த பள்ளிக்கான விருதும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் இந்தியப் பேரரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் போக்ரியால் அவர்களால் விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

பள்ளிகள் உங்கள் பள்ளியின் நல்லாசிரியரை தேர்வு செய்து நமது மாநிலச் சங்கத்திற்கு அனுப்பினால் 100% வெற்றி எனும் மாபெரும் விருதை உங்களுக்கு வழங்குகின்றோம்.

உங்கள் பள்ளியின் பெயரும் புகழும் உங்கள் நலவாழ்வும் பெருவாழ்வும் ஓங்கி உயர்ந்து ஒளிவீசிட நமது சங்கம் உங்களுக்கு கலங்கரை விளக்காய் இருந்து நல்வழி காட்ட காத்திருக்கிறோம்.

வாருங்கள் அசாத்தியமான வைகளை சாத்தியம் ஆக்குவோம் என்று வணங்கி வரவேற்கின்றோம்…..

திரு Dr. K.R. நந்தகுமார், மாநில பொதுச் செயலாளர்
“Gem of India” Dr. J. B.விமல், மாநில துணை தலைவர்

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …