சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று மயான கொள்ளை விழாவினை முடித்து, அம்பாள் வீதிவுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை 8 மணியளவில் பல்வேறு முருகபெருமான் அலங்கார நாயகனாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிவுலாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அவ்வகையில், 12.03.2022, சனிக்கிழமை வள்ளி முருகன் திருக்கல்யாணம் விஸ்வகர்ம மக்களால் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந் நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” MJF Ln Dr திரு லி. பரமேஸ்வரன், திருமதி சுகந்தி பரமேஸ்வரன், திரு. பாலாஜி, திருமதி பவானி பாலாஜி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான ” ஜீனியஸ்” K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி புகைப்படக்கலைஞருமான திரு. V. கந்தவேல் ஆகியோர் கலந்துக் கொள்ள ஆலய அர்ச்சகர் திரு. ராஜசேகர குருக்கள், திரு. மகேஷ் குருக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்
ஒளிப்பதிவு : V. கந்தவேல்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி