காணாமல் போய் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370.
ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 1588 மைல் தொலைவில், பிரெஞ்ச் செயற்கைகோள் படத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாகவும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள், மலேசிய அரசு மிது குற்றம்சாட்டியுள்ளார். மலேசிய அரசு விமானம் குறித்த தகவல்களை மறைப்பதாகவும், பொய்யர்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர். மேலும் மலேசிய அரசுக்கு எதிராக சீனாவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி