வடசென்னை நாடாளுமன்ற தொகுதி ஓட்டேரி பாலம் சந்திப்பு, திரு.வி.க.நகர் பகுதியில் கழகத்தின் தலைவர் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட கழக வெற்றி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பேசியபோது,
வரவிருக்கும் 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், மத்தியில் மதசார்பற்ற ஒரு ஆட்சியை உருவாக்க நடக்க விருக்கும் தேர்தல்.
அந்த தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் கைகாட்டிய வேட்பாளரான கிரி ராஜன் அவர்களை ஆதரிக்க உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறோம்.
தமிழகத்தில் விண்ணைமுட்டும் விலைவாசியால் மக்கள் அவதிப்பட்டிருக்கிறார்கள். சிலவற்றை உங்களிடம் எடுத்து சொல்ல விரும்புகிறேன்.
பால் விலை கழக ஆட்சியில் லிட்டர் 17.75 ரூபாயாக இருந்தது இப்போது 24 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மஞ்சள் விலை 65 ரூபாயில் இருந்து 160 ஆக உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு கிலோ 62ல் இருந்து 84 ஆகவும்
உளுத்தம் பருப்பு விலை கிலோ 56ல் இருந்து 84 ஆகவும்
கடலை பருப்பு கிலோ ரூபாய் 38ல் இருந்து 74 ஆக உயர்ந்து விட்டது.
பூண்டு கிலோ 100 ரூபாயில் இருந்தது 140 ஆக உயர்ந்துள்ளது.
பாமாயில் ரூபாய் 36க்கு ஒரு லிட்டர் விற்கப்பட்ட விலை இன்று அதிமுக ஆட்சியில் 66 க்கு விற்பனையாகிறது.
புளி விலை கழக ஆட்சியின்போது கிலோ 45 ரூபாயில் இருந்தது, இப்போது அதிமுக ரூபாய் 110 க்கு உயர்ந்து விட்டது.
மிளகாய் விலை ரூபாய் 70ல் இருந்து 140 ஆகவும்,
தனியா விலை ரூபாய் 45ல் இருந்து 100 ரூபாயாகவும்,
மிளகு விலை ரூபாய் 275க்கு விற்கப்பட்டது இன்று அதிமுக ஆட்சியில் 680 ஆகவும் உயர்ந்து விட்டது.
இதேபோல சீரகம் கிலோ 160 ரூபாய்க்கு கழக ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டு, இப்போது 240 க்கு விற்கப்படுகிறது.
பொன்னி அரிசி கழக ஆட்சியில் கிலோ ரூபாய் 32 க்கு விற்கப்பட்ட நிலை மாறி, அதிமுக ஆட்சியில் 54 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
சர்க்கரை விலை 22 ரூபாயில் இருந்து இப்போது 36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
கடலை எண்ணெய் லிட்டர் 86ல் இருந்தது இப்போது 110 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூபாய் 250 என கழக ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஒரு
மூட்டை சிமெண்ட் விலை ரூபாய் 350 என்றும்
ஒரு டன் கம்பி விலை ரூபாய் 28000 என்பதை உயர்த்தி ரூபாய் 48000 க்கும்,
மணல் விலை ஒரு லோடுக்கு 7000 இருந்ததை 43000 ஆகவும் இந்த அதிமுக அரசு உயர்த்தியுள்ளது.
எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடவிருக்கும் அதிலும் இன்னும் பெருமையாக சொல்ல வேண்டு மென்றால் தலைவர் கலைஞர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. இரா.கிரிராஜன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று பிரச்சாரம் செய்தார்.