அர்ஜுனா விருது : இது நம்ம ஊரு விளையாட்டு அரசியல்

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார்.

அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு அமைச்சகம் மனோஜ் குமாருக்கு, அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அர்ஜுனா விருதுக்கான தேர்வு வெளிப்படையாகவும், நியாமாகவும் நடைபெறுவதில்லை எனும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

Manoj Kumar 1

புள்ளிகளின் அடிப்படையில், விருதுக்கான தேர்வு இருக்க வேண்டும் என்று வழிகாட்டல் நெறிமுறைகள் இருந்தாலும், அது எப்போதும் பின்பற்றப்படுவதில்லை என்று, முன்னாள் ஒலிம்பிக் வீரரும், அர்ஜுனா விருதைப் பெற்றவரும், அந்த விருதுக்கானவர்களை தேர்தெடுக்கும் குழுவில் முன்னர் உறுப்பினராக இருந்தவருமான வி தேவராஜன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த ஆண்டுத் தேர்வில், குத்துச் சண்டைப் போட்டிகளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மனோஜ் குமாரின் பெயரை பரிந்துரைக்காமல், வெண்கலப் பதக்கம் வென்றவரான ஜெய் பகவானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் குமார் நீதிமன்றம் செல்ல, அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *