ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னை வந்தார் அர்னால்ட்.
அப்பொழுது முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பை நினைவு கூர்ந்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
சென்னை வந்தபோது தன்னை சந்தித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்க மக்கள் அனைவரும் “அம்மா” என்று அழைப்பதில் தான் ஆச்சர்யப்படவில்லை என்றும், நீங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செய்யும் உதவிகள் நெஞ்சை நெகிழச் செய்தது, பெண் காவல் நிலையம் என்பது தான் இதுவரை எங்கும் கேள்விப்படாத அதியசம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசின் பல்வேறு நற்செயல்களுக்காகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் பிரதர்ஸுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
சென்னைக்கு என்னை வரவழைத்து என்னை உபசரித்தமைக்கு நன்றி. மிகப்பெரிய வெற்றி இது. நான் இதுவரை கலந்து கொண்ட விழாக்களிலேயே சிறந்தது ஐ பட விழாதான். இதில் கலந்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் சென்னைக்கு வந்த நொடியிலிருந்து என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டது, உபசரித்த விதம் என்னை நெகிழ வைத்தது.
ஹோட்டல் மற்றும் அங்கு பரிமாறப்பட்ட சுவையான உணவுகள் எல்லாமே அருமை. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல அமைந்தது ஐ பட நிகழ்ச்சி. நானும் ஆஸ்கர் விருது விழாக்களைப் பார்த்திருக்கிறேன், கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்குப் போயிருக்கிறேன். வேறு எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று, அவர்கள் எல்லாம், ஒரு தயாரிப்பை எப்படி மேடையில் கொண்டு வரவேண்டும் என்பதை உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சி கச்சிதமாக அமைந்தது. இந்தியாவின் வலிமையைக் காட்டியது.
அந்த பாடி பில்டர்ஸ் ஷோ மனதைத் தொடுவதாக, மிக இயற்கையாக அமைந்தது. அதற்கு மேல் என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை. காரணம் நான் மேடையேற அதுவே சரியான தருணமாக அமைந்தது.
அனைத்துக்கும் நன்றி. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார் அர்னால்ட்.