தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பாக நான்காம் தூணின் நாயகர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாநிலத் தலைவர் D.S.R. சுபாஷ் தலைமை தாங்க, நெற்றிக்கண் A.S.மணி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதியின் குரல் C.R.பாஸ்கர் பத்ம ஸ்ரீ டாக்டர் …
மேலும் படிக்கடியுஜே சார்பாக டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு விழா
டியுஜே (Tamilnadu Union of Journalists) சார்பாக 17.04.2014 அன்று பத்திரிகை உலகின் ஜாம்பவானும், நான்காம் தூணின் நாயகராகவும் விளங்கும் மறைந்த டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டின் நினைவு தினத்தையொட்டி, ஏப்ரல் 17, சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு அவரின் பட திறப்பு விழா, Madras Reporter’s Guild . Government Estate, Chennai – 2 ல் நடைபெறுவதாக உள்ளது . டி.யூ.ஜே சார்பில் நடைபெறும் இவ்விழாவிற்கு, கலையுலகப் பிரமுகர்கள், பத்திரிக்கையுலகின் ஜாம்பவான்கள் …
மேலும் படிக்ககுஜராத்தின் இன்றைய நிலை – எதில் முதல் இடம் ஜெயலலிதா விளக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தருமபுரி தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்தபோது கூறியதாவது: வாக்காளப் பெருமக்களே! ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில் குஜராத்தை விட தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டுமே …
மேலும் படிக்ககணக்கு தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை ரத்து
அரசியல் கட்சிகளால் வாங்கப்படும் மற்றும் கொடுக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும், ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கெடுவுக்குள் இது செய்யப்பட வேண்டும். ஆனால், 2012 – 2013ம் ஆண்டுக்கான கணக்கை பல்வேறு கட்சிகள் இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளன எனத் தெரிகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை …
மேலும் படிக்ககுஜராத் இன்றைய நிலை – எதில் முதல் இடம் ஸ்டாலின் கேள்வி?
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் உமாராணியை ஆதரித்து திரளான மக்கள் கூட்டத்தில் பேசிய போது.. தலைவர் கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத் மாநில வீழ்ச்சி – ஒரு ஒப்பீடு: அதேபோல பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. …
மேலும் படிக்கதென்கொரிய கப்பல் விபத்து – 300 பேரை காணவில்லை தேடும் பணி தீவிரம்
தென் கொரியக் கப்பல் முழ்கிய விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் சுமார் 300 பேரைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். கப்பலில் சென்ற சுமார் 470 பேரில் இதுவரை 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும், தேடும் விளக்குகளைப் பயன்படுத்தி அவசரச் சேவைப் பணியாளர்கள் தேடினர். ஆனாலும், கடலில் சுழல் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள், கப்பலுக்குள் நுழைய முயன்ற முயற்சிகள் பாதிக்கப்பட்டன. இது வரை குறைந்தது …
மேலும் படிக்கதென் கொரியாவில் 477 பயணிகளுடன் சென்ற கப்பல் மூழ்கி விபத்து-107 பேரைக் காணவில்லை
தென் கொரியாவில் 477 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 107 பேரைக் காணவில்லை. கப்பல் ஒரு பக்கமாக சாய்வதாக கப்பற்படைக்கு தகவல் வந்ததும், ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலமாக விரைந்து சென்ற மீட்புக் குபவினர் 368 பயணிகளை பத்திரமாக மீட்டனர். 2 உடல்களைக் கைப்பற்றினர். மீதம் 107 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. இந்த கப்பலில் சுமார் 338 மாணவர்களும், அவர்களது …
மேலும் படிக்ககருணாநிதிக்கு, ஜெயலலிதா சவால் – நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?
ஆரணியில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே இழைத்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், காவிரி பிரச்னை குறித்து, வாதம் செய்ய, சட்டசபையில் நேரம் ஒதுக்கலாம். அதில் விவாதித்து, யார் தவறு செய்தார்கள், யார் நியாயமாக நடந்து கொண்டார்கள், யார் நம் உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை, நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் எனக் கூறி இருக்கிறார். அவரது …
மேலும் படிக்கராகுல், அன்னா ஹசாரேவைத் தொடர்ந்து மோடியை சந்திக்கிறாரா நடிகர் விஜய்?
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மோடியை நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு கோவையில் வைத்து நடைபெறும் எனத்தெரிகிறது. இது தொடர்பாக @Vijay_cjv ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது. “Indeed …
மேலும் படிக்கநிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த தொகுதியிலேயே விரட்டி அடிக்கப்பட்டார் – மு.க. ஸ்டாலின்
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரி திருமதி பவித்ரவள்ளியை ஆதரித்து தாராபுரம் பொது கூட்டத்தில் பேசிய போது: அதிமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் எங்கும் சென்று பேச முடியவில்லை, ஒட்டு கேட்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதிமுக அளித்த வாக்குறுதிகள், உறுதிமொழிகள் என்ன ஆனது என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி