சட்ட அறிவுரை: பல்வேறு துன்புறுத்தலில் இருந்து பெண்களை காப்பது எப்படி? – வழக்கறிஞர் டி.ராமலிங்கம்
தாய்லாந்து சாட்டிலைட் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களை கண்டுபிடித்தது?
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 300 பாகங்களை தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த சாட்டிலைட் படம் தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட்டில் இருந்து மார்ச் 24 ம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு நாள் முன்புதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 122 பொருட்களை பிரெஞ்ச் சாட்டிலைட் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பொருட்களும் தென்மேற்கு பெர்த்திலிருந்து சுமார் 2700 கி.மி தொலைவில் இருப்பதாக …
மேலும் படிக்கஐ.பி.எல்.பிக்ஸிங் – சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை நீக்குங்கள் – சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
மாட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் தடை மற்றும் சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடி பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். …
மேலும் படிக்ககாங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று புது தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் * 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை 3 வருடங்களில் எட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையாக்கப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் * தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட …
மேலும் படிக்கசெயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய மந்திரி
காணாமல் போய் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370. ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 1588 மைல் தொலைவில், பிரெஞ்ச் செயற்கைகோள் படத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாகவும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் …
மேலும் படிக்கமு.க. அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் – கருணாநிதி
திமுகவின் கொள்கைகளுக்கு விரோதமான முறையில் செயல்பட்ட மு.க. அழகிரி சில நாட்களுக்கு முன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரிடம் விளக்கமும் கோரப்பட்டது. ஆனால் எந்த வித விளக்கமும் தராமல் கட்சி தலைமையை மீண்டும் விமர்சித்ததால் மு.க. அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்கமலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். லண்டனின் இன்மர்சாட் செய்தி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும், அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை …
மேலும் படிக்கசமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி,காங்கிரஸ் தொண்டர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், சமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி என்பதற்கான பயிற்சி திருச்சியில் நேற்று (23.03.2014) நடைபெற்றதாக அறிவித்துள்ளது. இதில் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 26 மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவது பற்றி பயிற்சி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்கவேலைநிறுத்தம் செய்ய வேண்டாம்: சௌதியில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை
சௌதி அரேபியாவில் இருக்கின்ற இந்தியக் குடிமக்களை அங்கே வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரித்திருக்கிறது. அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் சௌதி அரேபிய நிர்வாகத்தால் கைதுசெய்யப்படுகின்ற அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற நிலைமையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சௌதி தலைநகர் ரியாத்தில் மருத்துவமனைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் பெண்கள் சிலர், கடந்த ஒன்பது மாத காலமாக தனக்கு சம்பளம் தரப்படவில்லை எனக் கூறி …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி