உலக ரத்ததான தினம்
உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது இளம் நண்பர்கள் இதனை வழிநடத்திச் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி