தமிழகம்

சென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்களின் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் …

மேலும் படிக்க

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று …

மேலும் படிக்க

இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு கருணாநிதி கண்டனம்

இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், மத்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்து வருவதாக கூறியுள்ளார். அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை …

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை

மெட்ரோ ரயில்களில் கூடுதல் பயணிகளை ஈர்க்க 3 வகையான கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது. சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதன் பிறகு வார நாட்களில் …

மேலும் படிக்க

வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள்

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் நெருங்கி வருவதால், அங்கு வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு, சென்னை ஆயக்கர் பவனில் சிறப்பு வருமான வரி படிவம் தாக்கல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் வருமான வரி தாக்கல் செய்ய மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதன் வழிமுறைகளை எளிமையாக்கும் நோக்கத்துடன் 34 சிறப்பு கவுண்டர்களை வருமானவரி தலைமை ஆணையர் ஸ்ரீவஸ்தவா, சென்னை …

மேலும் படிக்க

தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது, கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாது என கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல்   தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டீல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறினார். கர்நாடகம் கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் உள்ள காவிரிநீரை குடிநீர் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கர்நாடக …

மேலும் படிக்க

திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். திருமாவளவன் என்னிடம் பழகிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். டிஜிபி அலுவலகத்தி லும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் அளித்ததால் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை போலீஸ் கமிஷனர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இழந்ததால்தான் இந்த புகாரை முதல்வரின் தனிப் பிரிவில் …

மேலும் படிக்க

என்எல்சி போராட்டம் தற்காலிக வாபஸ்: தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 39 நாட்களாக என்எல்சி தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நெய்வேலியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தி 24% ஊதிய உயர்வு வழங்க …

மேலும் படிக்க

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் …

மேலும் படிக்க

நம்ம சென்னைக்கு இன்று 376 வது பிறந்த நாள்!

எழில்மிகு நகரமான நமது சென்னை மாநகரம் தனது 376-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அமைதிப் பூங்காவான சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர்.  1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா …

மேலும் படிக்க