மாநகர செய்திகள்

ஹேர் ஸ்டைலை பார்த்தா தெரியல டீசண்ட்டா ஆளுன்னு – சினிமா ஸ்டைல் திருடன்

சென்னையில் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்கிற நிலையில்அதனை விழுங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் முயற்சியால் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அந்த தங்கச் சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. சென்னை புனித தாமஸ் மவுண்டை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை கவனித்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு …

மேலும் படிக்க

ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில், சுமார் 3 ,300 ஏக்கர் – கோர்ட்டில் அரசு வக்கீல் பவானி சிங்

தற்போது நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில்,   சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். முன்பு முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா, சொத்துக் குவித்ததாக தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வார காலமாக …

மேலும் படிக்க

பவர் ஸ்டார் எங்கள் மீது பவரை காட்டுகிறார்: குடியிருப்பு சங்கத்தினர்!

மதுரவாயல் அருகே உள்ள வானகரத்தில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் …

மேலும் படிக்க

டியுஜே வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு

காஞ்சிபுரத்தில் பத்ரிக்கையாளர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து டியுஜே சார்பாக இன்று மாலை 3 மணியளவில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம்  காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.

மேலும் படிக்க

முன்னாள் இராயபுரம் MLA இரா. மதிவாணன் இல்லத் திருமண விழா

திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில மீனவரணி துணைச் செயலாளரும், முன்னாள் இராயபுரம் பகுதி சட்ட மன்ற உறுப்பினருமான இரா. மதிவாணன் அவர்களின் இளைய மகள் ம. இந்துமதி, இரா.ஞா.அமிர்தராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திமுக பொறுளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில், கழக முன்னோடிகளுடன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், இணை ஆசிரியர் லி. பரமேஸ்வரன், …

மேலும் படிக்க

வள்ளலாரை பின்பற்றும் அடியார்களின் உண்ணாவிரதம்

வள்ளலாரை பின்பற்றும் அவரின் அடியார்கள், வள்ளாலார் வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டியும் மேலும்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க

பள்ளி ஆண்டு விழா! விளையாட்டு உற்சாகம் இங்கே…

இன்று தனியார் பள்ளிகள் கல்வியை மட்டுமே சிறந்த முறையில் தருவது மட்டுமல்லாது, தங்களது பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வன்ணம் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் திருவொற்றியூரில் உள்ள செயிண்ட் அந்தோணி மேல்நிலைப் பள்ளி நடத்திய ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ஆர். பிச்சை, மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் …

மேலும் படிக்க

சென்னையில் (மெட்ராஸ் ஐ) கண் நோய் பரவுகிறது

வைரஸ் மூலம் கண் நோய் ஏற்படுகிறது. தட்ப வெட்ப கால சூழ்நிலைக்கேற்ப இந்நோய் உண்டாகிறது.  இப்போது கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கண் நோய் அதிகளவு பாதித்து வருகிறது. கண் நோய் காற்று மூலமாகவும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும் வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. …

மேலும் படிக்க

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி சென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது. ஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் …

மேலும் படிக்க