மாநகர செய்திகள்

சென்னையில் விடிய விடிய மழை – மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரவும் முழுவதும் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. வெயில் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

“அக்னி நட்சத்திரம்” கத்திரி வெயில் 113 டிகிரியை தாண்டும் – வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “அக்கினி நட்சத்திரம் அல்லது “கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும், வைகாசிமுதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. இது மே 28 ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது. …

மேலும் படிக்க

சென்னையில் மே 1 முதல் 2 மணி நேரம் மின்தடை – உங்கள் ஏரியாவில் எப்போது மின் தடை அறிந்து கொள்ளுங்கள்

மே 1ம் தேதி முதல் சென்னையில் 2 மணி நேர மின் தடை அமலுக்கு வருகிறது. மின்சார வாரியம் அறிவித்துள்ள, சுழற்சி முறையில் மின் தடை அமலாகும் பகுதிகளின் விவரம் : காலை 8 மணி முதல் 10 மணி வரை புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை (ஒரு பகுதி), தியாகராய நகர், பாண்டி பஜார், தெற்கு …

மேலும் படிக்க

டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா

[pullquote] டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா[/pullquote] உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா  மற்றும் ‘’சாகித்ய அகாதமி“ விருது பெற்ற திறனாய்வுத் தென்றல் மறைந்த தி.க.சிவசங்கரன் (தி.க.சி) அவர்களின் படத் திறப்பு விழா!  என முப்பெரும் விழாவாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்  அமைப்பின் சார்பில் சென்னை பிரஸ் கிளப்பில் (எம்.எல்.ஏ.ஹாஸ்டல் அருகில், …

மேலும் படிக்க

சென்னை சேப்பாக்கத்தில் 33 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தங்கம் இருப்பதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 33 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் இருந்த தமீம்அன்சாரி, அவரது தம்பி ரகுமான் ஆகியோரிடம் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில்: நான்கு மாதங்களில் போக்குவரத்து தொடக்கம்

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலும், சென்ட்ரலில் இருந்து தாமஸ் மவுண்ட் வரையயிலும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் …

மேலும் படிக்க

காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம், மிரட்டல் கடிதம்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

[pullquote]பாஜக ஆட்சிக்கு   வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.[/pullquote] கடந்த சில தினங்களுக்கு முன்னர்,   காவல் நிலையங்களுக்கு வந்திருந்த மிரட்டல் கடிதத்தால்   சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்   நிலையில் உள்ளன. இதில் சென்னையில் உள்ள காவல்   நிலையங்களில் உச்சகட்ட உஷார் நடவடிக்கையாக, புகார்   கொடுக்க வருபவர்களை பற்றி தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது.   புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை   வரவேற்பு அறையிலேயே விரிவாக எழுதி வாங்கினர். …

மேலும் படிக்க

டியுஜே சார்பாக டாக்டர் சிவந்தி ஆதித்தன் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பாக நான்காம் தூணின் நாயகர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாநிலத் தலைவர் D.S.R. சுபாஷ் தலைமை தாங்க, நெற்றிக்கண் A.S.மணி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதியின் குரல் C.R.பாஸ்கர் பத்ம ஸ்ரீ டாக்டர் …

மேலும் படிக்க

டியுஜே சார்பாக டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு விழா

டியுஜே (Tamilnadu Union of Journalists) சார்பாக 17.04.2014 அன்று பத்திரிகை உலகின் ஜாம்பவானும், நான்காம் தூணின் நாயகராகவும் விளங்கும் மறைந்த டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் அவர்களின் முதலாம் ஆண்டின் நினைவு தினத்தையொட்டி, ஏப்ரல் 17, சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு அவரின் பட திறப்பு விழா, Madras Reporter’s Guild . Government Estate, Chennai – 2 ல் நடைபெறுவதாக உள்ளது . டி.யூ.ஜே சார்பில் நடைபெறும் இவ்விழாவிற்கு, கலையுலகப் பிரமுகர்கள், பத்திரிக்கையுலகின் ஜாம்பவான்கள் …

மேலும் படிக்க

சென்னை பல்கலைகழகத்தின் இலவச கல்வி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2014-2015 ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த 3 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், …

மேலும் படிக்க