மாநகர செய்திகள்

நான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: “சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய …

மேலும் படிக்க

கிரானைட், தாது மணல் கொள்ளை குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் …

மேலும் படிக்க

கந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?

பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர்.  கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை?

சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், …

மேலும் படிக்க

வட சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை,  இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் …

மேலும் படிக்க

31 ரயில்களின் பயண நேரம் குறைப்பு: ரயில்களின் புதிய கால அட்டவணை

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 31 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுள்ளதாகவும் சில ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  SALIENT FEATURES OF PUBLIC TIME TABLE – September 2014  INTERIM BUDGET TRAINS:   I.INTRODUCTION OF NEW TRAINS:  A.* PREMIUM TRAINS:  1.*Train No.12528/12527 Kamakya – Chennai Central Air-conditioned (Weekly) Premium Exp. (via Malda Town, …

மேலும் படிக்க

ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளையை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. எனவே, தனியார் பேருந்துகட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகட்டணம் 10 முதல் 20 % வரை உயர்த்தப்படுவதாகவும், இக்கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் …

மேலும் படிக்க

நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை,  இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் …

மேலும் படிக்க

போலி கேஸ் ஏஜன்சி ஊழியர்கள் – பொதுமக்கள் உஷார்

சமீபகாலமாக சில கம்பெனிகளின் பெயர் பொறித்த சீருடையில் வரும் மர்ம நபர்கள் கேஸ் சிலிண்டர்களை திருடி சென்றுவிடுகின்றனர். ‘கம்பெனியில் இருந்து வருகிறோம். கேஸ் கசிவு உள்ளதா என செக் செய்ய வேண்டும்” என்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பரிசோதித்துவிட்டு, சிலிண்டரில் லீக்கேஜ் உள்ளது. கம்பெனிக்கு எடுத்து சென்று சரி செய்து தருகிறோம் என கூறி, கேஸ் உள்ள சிலிண்டரை கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால், திரும்பி வருவதில்லை. சந்தேகப்பட்டு விசாரித்தால், …

மேலும் படிக்க

“ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” ஐந்தாம் ஆண்டு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன், ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் இணைந்து நடத்தும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விழங்கும் சாதனையாளர்களுக்கு இவ்வாண்டிற்கான “ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் ஐந்தாம் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை (26-07-2014) பகல் 2 மணியளவில், சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்கும்மாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம். இவண்,  

மேலும் படிக்க