கந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?

பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர்.  கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெறலாம்.

மேலும், கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், “இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர் பான அறிக்கையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Check Also

முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச …

Leave a Reply

Your email address will not be published.