முக்கியசெய்திகள்

சென்னை மோனோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது. இந்த முதல் கட்டத்தில் சென்னை பூந்தமல்லியிலிருந்து கத்திபாரா வரை இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். போரூரிலிருந்து வடபழனியை இணைக்கும் பாதையும் போடப்படும். முதல் கட்டத்தில் 20.68 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு என 3,267 கோடி ரூபாய் செலவாகும் என …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

பிரதி வருடம் ஐப்பசி மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் சிவாலயங்கள்தோறும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்னர் அன்னத்தால் (வெள்ளை சாதம், காய்கறிகள் இன்னும் பல அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு சிவபெருமான் மீது அலங்கரித்த அன்னத்தை தரிசனம் செய்த பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தரிசனம் காண்போர்க்கு, அன்னத்தை உண்போர்க்கு அவர்களது வாழ்வில் அன்னம் குறைவின்றி கிடைக்குமென ஐதீகம். இராயபுரம், கல்மண்டபம் ஸ்ரீ அங்காள …

மேலும் படிக்க

மாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் (டியுஜே) தலைவராக டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு நடைபெற்ற முதல் மற்றும் டியுஜே வின் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பத்திரிகை தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை …

மேலும் படிக்க

‘நா காக்க!’ ‘நா காக்க!’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்

சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று  ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மரண தண்டனை விவகாரம்: ராஜபக்சேவுடன் பேசினாரா மோடி?

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌சேவுடன் தொலைபேசியில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மாறாக இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அது சொல்லியிருக்கிறது. இலங்கைக்கு போதைப்பொருள் …

மேலும் படிக்க

ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு

திருச்சியில் இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமது புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸிலிருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் புதுக்கட்சி தொடங்கியுள்ளார். புதுக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு அணியிலும் உள்ள தனது …

மேலும் படிக்க

நைஜீரியா தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

நைஜீரியாவில் ஒரு பள்ளியில் நேற்று தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 48 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில் இது போன்ற வன்முறை தாக்குதல்கள் கோழைத்தனமான செயல், பலியோனோர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்கொலை …

மேலும் படிக்க

TNPSC குரூப் 2: மீண்டும் தேர்வு எழுத 48 பேருக்கு அனுமதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 பிரதான தேர்வின்போது இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 48 பேர் தேர்வாணைய அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகர் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி குரூப் 2-இல் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வை நடத்தின. இதில் மொத்தம் 6 லட்சம் …

மேலும் படிக்க

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தலைவர்கள் என்ற பெயரில் அட்டகாசம்…

ராஜஸ்தான் மாநிலம் ராஹ்சமாந்த் மாவட்டத்தின் ஒரு பழங்குடி பகுதியில், ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்களின் உத்தரவின் பேரில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான அந்த பெண்ணுக்கு மொட்டையடிக்கப்பட்டு, அவரது முகத்தில் கரி பூசப்பட்டு பின் நிர்வாணப்படுத்தப்பட்டு அவரை கழுதை மீது ஏற்றி கிராமத்தில் ஊர்வலமாக சுற்றி வரும்படி செய்தாக புகார் எழுந்திருக்கிறது. தனது நெருங்கிய உறவினர் ஒருவரை …

மேலும் படிக்க