முக்கியசெய்திகள்

திருமண விழா:ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் துணை ஆசிரியர் கே. சங்கர் இல்லத் திருமண விழா

திருமண விழா: PPFA தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் துணை ஆசிரியருமான கே. சங்கர் அவர்களின் இல்லத் திருமண விழா.

மேலும் படிக்க

திருமண விழா: TNPMHSSMA மாநில பொருளாளரும், ஷேபா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் J.B. விமல் அவர்களின் இல்லத் திருமண விழா

திருமண விழா: TNPMHSSMA மாநில பொருளாளரும், ஷேபா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் J.B. விமல் அவர்களின் இல்லத் திருமண விழா

மேலும் படிக்க

பாஜக எம்எல்ஏவை சுட்டுக் கொலை செய்ய முயற்சி: தலைநகர் டில்லியில் பரபரப்பு

ஷாதரா தொகுதி சட்ட மன்ற பாஜக உறுப்பினர் ஜிதேந்தர் சிங் ஷன்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல மர்ம நபர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணிந்தபடி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஜிதேந்தர் வீட்டுக்கு வந்த மர்ம நபர், மூன்று முறை துப்பாக்கியால் சுட முயன்றபோதும் அவரது குறியில் இருந்து ஜிதேந்தர் சிங் தப்பினார்.  அவரது வீட்டு வாயில் அருகே மேல் தளப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் …

மேலும் படிக்க

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், …

மேலும் படிக்க

தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்

தமிழகத்தில், 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் 41 இடங்களில் இயங்கி வருகின்றன. வாகன ஓட்டிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த …

மேலும் படிக்க

பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம், பாதுகாவலர்கள் எங்கே? அதிர்ச்சி படம்

பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அருகில் பிரபல ரவுடி இருப்பது போன்ற ஒரு படம் இணையதளங்களில் உலா வருகிறது. இது பற்றி ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், வரிச்சூர் செல்வத்தின் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன, பலமுறை சிறை சென்ற இந்த ரவுடி மீது ஒரு முறை போலிஸ் என்கவுண்டர் …

மேலும் படிக்க

ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியராக பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் …

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் ஆசிரியர் தின உரையை பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நாடு முழுவதிலும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் பலவேறு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்களிடம் உரையாற்றி வந்துள்ளார். எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்காகவும், அன்றைய தினம் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் வீடியோ …

மேலும் படிக்க

அஜித் ரசிகர்கள் கண்டன போஸ்டர்

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை கைது செய்யக் கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர். கடநத் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் தூண்டித்துவிட்டார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் …

மேலும் படிக்க

அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19.8.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள் 20.8.2014 முதல் 24.8.2014 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் …

மேலும் படிக்க