முக்கியசெய்திகள்

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். நாள்: 31-08-2014

மேலும் படிக்க

வாழ்த்துகிறோம் DSR சுபாஷ் அவர்களை… DSR சுபாஷ் தலைமையிலான TUJ விற்கே அங்கீகாரம்: IJU மாநாட்டில் அறிவிப்பு

  ஆந்திராவில்(திருப்பதி) நடந்த அகில இந்திய மாநாட்டில் (IJU), DSR வழி கண்ட DSR சுபாஷ் தலைமையிலான சங்கத்திற்கே அங்கீகாரம் என்ற அறிவிப்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்ற எங்களின் தலைவா DSR சுபாஷ் அவர்களே! நீங்கள் ஏழு மலைகளின் நகரில் வெற்றிக் கொடி நாட்டிய ஏகலைவன். தந்தையின் வழியில் நின்று எங்களை தலை நிமிரச் செய்தவரே! சங்கத்தை சிதைக்க நினைத்த புல்லுருக்களையும், வல்லுறுக்களையும் அற வழியில் சிதைத்து எங்களை …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் பயணம்

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். இன்று அங்கு அவர் வியட்நாம் பிரதமர், துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர்களை சந்திக்கிறார். எண்ணெய் துறையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் அவர் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட உள்ளார்.

மேலும் படிக்க

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் – பிரதமர் மோடி

தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் உள்பட நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி, அவரது 64ஆவது பிறந்த நாளைக் கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், மோடி இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து மோடி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எனது பிறந்த நாளுக்காக …

மேலும் படிக்க

ஐ படம் இசை இன்று வெளியீடு: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்பு

சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் “ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நட்சத்திர நடிகர் அர்னால்ட் பங்கேற்கிறார். “ஆஸ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் “ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் …

மேலும் படிக்க

சந்திரசேகரராவ் ‘’குழி தோண்டுவது’’ தன்னுடைய ஆட்சியை புதைக்கத்தான்..! – DSR சுபாஷ்

சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தெலுங்கானா தெலுங்கானாவை மதிக்க வேண்டும். தெலுங்கானாவை தொடர்ந்து அவமதித்தால் பத்து அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்து விடுவோம் எனக் கூறியுள்ளார் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் மற்றும் பத்திரிக்கையாளர் குரல் ஆசிரியருமான DSR சுபாஷ் அவர்கள் சந்திரசேகரராவ் ‘’குழி தோண்டுவது’’ தன்னுடைய ஆட்சியை புதைக்கத்தான்..!  என கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …

மேலும் படிக்க

டோல் கேட் மோசடி சுங்க வரியா..? பகல் கொள்ளையா..? – திரு(த்)ந்துமா அரசு

டோல் கேட் மோசடி  சுங்க வரியா..?  பகல் கொள்ளையா..? – திரு(த்)ந்துமா அரசு அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!! 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் …

மேலும் படிக்க

சிண்டு முடியும் வேலையை விடுங்கள்: மு.க. ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களாக சில பத்திரிக்கைகள் உண்மைக்கு மாறாகவும்,அவர்களே கற்பனை செய்து கொண்டும் தலைவருக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு செய்திகளை எழுதி வருகிறார்கள்.இந்த தகவல்கள் …

மேலும் படிக்க

ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது : சந்திரசேகரராவுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் எச்சரிக்கை

ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் கூறினார். தெலங்கானா குறித்து அவதூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடி ஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க