முக்கியசெய்திகள்

இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் காலமானார் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை …

மேலும் படிக்க

வருமான வரி வழக்கு: அக். 1ல் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்:எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் …

மேலும் படிக்க

சகாயம் தலைமையிலான குழுவிற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

கிரானைட், மணல் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் தமைமையிலான குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சகாயம் குழுவினரின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என  உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக …

மேலும் படிக்க

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்ககூடாது: முதல் அமைச்சர் ஜெயலலிதா

ஆங்கிலத்தைப் போல் இந்தியையும் முதன்மைப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்று தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை …

மேலும் படிக்க

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.   வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் …

மேலும் படிக்க

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், …

மேலும் படிக்க

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த …

மேலும் படிக்க

சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி. சீன அதிபர் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் மற்றும் நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் சீன இராணுவத்தின் சமீபத்திய ஊடுறுவல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 1996-ல் ஜியாங் ஜீமென் , 2006–ல் ஹூஜிண்டாவோ ஆகியோரை அடுத்து …

மேலும் படிக்க

ஷங்கரின் “ஐ”, “The Fly(1986)”: காப்பியா?

சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த, சமீபத்தில் பிரமாண்டமாக (சொதப்பலாக) இசை வெளியீட்டு விழா நடந்த “ஐ” படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது. அக்கதையின்படி இந்தப் படம் “த  ஃப்ளை” என்று 1986 ல் வெளிவந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து …

மேலும் படிக்க

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் ஆண்டு விழா

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் 109 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.வி. சரஸ்வதி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீ வித்யானந்தர் மகராஜ், ஸ்ரீமத் கௌதமானந்த மகராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் படிக்க