முக்கியசெய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயருகிறது: தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை

ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. 2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் …

மேலும் படிக்க

இந்திய மங்கள்யான் , அமெரிக்க கியூரியாஸிட்டியும் ட்விட்டரில் நலம் விசாரிப்பு

Namaste, @MarsOrbiter! Congratulations to @ISRO and India’s first interplanetary mission upon achieving Mars orbit. — Curiosity Rover (@MarsCuriosity) September 24, 2014 Howdy @MarsCuriosity ? Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014 செவ்வாயை ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், செவ்வாய் ஆராய்ச்சியில் இணைந்திருக்கும் இந்தியாவின் மங்கள்யான் …

மேலும் படிக்க

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது: பெங்களூர் நீதிபதி டி’குன்ஹா

ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற வேண்டும் என பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி விடுத்த கோரிக்கையை நீதிபதி டி’குன்ஹா நிராகரித்துவிட்டார். எக்காரணம் கொண்டும் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது எனவும் அன்றைய தினம் உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கின் …

மேலும் படிக்க

214 நிலக்கரிச் சுரங்கங்கள் உரிமம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 1993 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1993 – 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவற்றை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி மத்திய …

மேலும் படிக்க

கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்: மறுபடியும் கூட்டணியா?

தி.மு.க தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ளது அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை காலை சந்தித்தார். தனது பேத்தியின் திருமண பத்திரிகையை கருணாநிதிக்கு கொடுத்த ராமதாஸ், திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நாகரிகம் தெரிந்தவர். தமிழகத்தில் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்கும் தலைவர். அதனாலேயே எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு தவறாமல் அவரை அழைக்கிறோம்” …

மேலும் படிக்க

உபசரிப்பு அமோகம், முதல்வர் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸுக்கு அர்னால்ட் நன்றிக் கடிதம்

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னை வந்தார் அர்னால்ட். அப்பொழுது முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பை நினைவு கூர்ந்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சென்னை வந்தபோது தன்னை சந்தித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்க மக்கள் அனைவரும் “அம்மா” என்று அழைப்பதில் தான் ஆச்சர்யப்படவில்லை என்றும், நீங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செய்யும் உதவிகள் நெஞ்சை நெகிழச் செய்தது, பெண் காவல் …

மேலும் படிக்க

மங்கள்யான் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.  மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்தி‌ரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு …

மேலும் படிக்க

உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி: அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாநகராட்சி மேயர், 4 நகராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக் கப்பட்டனர். கோவை மாநகராட்சி மேயர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், நான்கு …

மேலும் படிக்க

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் பறந்து செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குள் சென்றது. செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ …

மேலும் படிக்க

என்கவுண்டர்களுக்கு FIR கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

என்கவுண்டர் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டரை எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் உபகரணத்திலோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினரின் என்கவுண்டரை மாநில சிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும். அனைத்து என்கவுண்டர் வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். விசாரணை அறிக்கையும் பதிவு செய்யப்பட வேண்டும். என்கவுண்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை காவலர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியதும் …

மேலும் படிக்க