முக்கியசெய்திகள்

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது. இது சம்பந்தமாக தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, …

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாசகர்கள் அனைவருக்கும் ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும் படிக்க

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பரப்பு குறைந்துள்ளது: ஆஸ்திரேலியன் பிரதமர் டோனி அப்பாட்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தேடப்படுகின்ற இடத்தின் பரப்பளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக கடலுக்கடியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் விமானத்துடைய கருப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக, சீனாவில் வர்த்தக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நேரத்தில் செய்தியாளர்களிடம் திரு.அப்பாட் கூறினார். இந்த விமானத்தின் பாகங்களை இப்போது மொத்தம் 47 ஆயிரம் சதுர …

மேலும் படிக்க

பாஜக வெளியிட்டது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை? ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக அப்படியே ஜெராக்ஸ் எடுத்து, அதில் சின்னத்தை மாற்றி, தங்கள் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, காங்கிரஸ் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கான பல வேலைகளை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னர், நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், …

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை சரியல்ல – முலாயம்சிங் யாதவ்

மத்தியில் சமாஜ்வாதி கட்சி அங்கம் வகுக்கும் அரசு ஆட்சிக்கு வந்தால், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வாக்குறுதி அளித்தார். பாலியல் பலாத்காரத்துக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கருத்து, தேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முலாயம் சிங், “ஆண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தவறு செய்வார்கள். அதனால் அவர்களுக்கு …

மேலும் படிக்க

எஜமானர் கொலை வழக்கில் சாட்சி சொல்ல நீதிமன்றம் வந்த நாய்.

பிரான்ஸில் தன்னுடைய எஜமானரைக் கொன்ற குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒன்பது வயது நாயொன்று  நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தது. தலைநகர் பாரிஸில் 59 வயது எஜமானி ஒருவருடன் டாங்கோ எனும் லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் வசித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த எஜமானி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நாயின் எஜமானி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வழக்கு …

மேலும் படிக்க

கத்தி – தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் அல்லி ராஜா உடன் ஜெயசூர்யா

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதற்கான ஆதாரம் என்று இணையத்தில் உலவி வரும் ஃபோட்டோக்கள். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருவதாகவும், லைக்கா நிறுவனத்தின் செயல் …

மேலும் படிக்க

சென்னை பல்கலைகழகத்தின் இலவச கல்வி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2014-2015 ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த 3 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், …

மேலும் படிக்க