இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி மேயர், 4 நகராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

கோவை மாநகராட்சி மேயர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், நான்கு நகராட்சித் தலைவர்கள், ஆறு பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு கடந்த 18-ந் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில், எனது தலைமையிலான அரசின் மூன்றாண்டு சாதனைத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங் களையும், தொலை நோக்குத் திட்டங்களையும் நிலைநிறுத்தி, எனது அன்பான வேண்டு கோளினை ஏற்று, அதிமுக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்து, உங்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் என்னை ஊக்கப்படுத்தி, எனது கரங்களை மேலும் வலுப்படுத்தி, நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக, அல்லும் பகலும் அயராது அரும்பாடுபட்ட என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளுக்கும், அமைச்சர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டக் கழக நிர்வாகி களுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.