சிண்டு முடியும் வேலையை விடுங்கள்: மு.க. ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த சில வாரங்களாக சில பத்திரிக்கைகள் உண்மைக்கு மாறாகவும்,அவர்களே கற்பனை செய்து கொண்டும் தலைவருக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு செய்திகளை எழுதி வருகிறார்கள்.இந்த தகவல்கள் அனைத்தும் அவர்கள் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் உவமைப்படுத்தி செய்து வருகிறார்கள்

நான் என்றும் திமுகவிற்கும்,தலைவரின் தலைமைக்கும் கடமைப்பட்டவன் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. இப்பொழுது என்னுடைய முழு கவனமும் கழகத்தை வலுப்படுத்துவதில் தான் உள்ளது.

ஆகையால் அனைத்து பத்திரிக்கைளையும் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது இனியாவது சிண்டு முடியும் வேலையை நிறுத்துங்கள்.

என கூறியுள்ளார்

stalin1 stalin2

Check Also

மக்களுக்கான சேவைக்காக

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *