முக்கியசெய்திகள்

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அஜீத் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி …

மேலும் படிக்க

தனிக்கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது தொட்ர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியில் ஒரு வழியாக புலி வந்துருமோ?

மேலும் படிக்க

ஐபிஎல் சூதாட்டம்: முட்கல் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பு

ஐபிஎல் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் என். ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் இன்று உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட நீதிபதி டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பிலான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் …

மேலும் படிக்க

விநாயக சதுர்த்தி: தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வெள்ளிக்கிழமை (?29-08-2014) அன்று தமிழகம் முழுவதும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் …

மேலும் படிக்க

ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளையை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. எனவே, தனியார் பேருந்துகட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகட்டணம் 10 முதல் 20 % வரை உயர்த்தப்படுவதாகவும், இக்கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் …

மேலும் படிக்க

ஜப்பான் மொழியில் மோடி ட்வீட்

பிரதமர் ஜப்பான் செல்லவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய மொழியில் ட்விட்டரில் தனது கருத்துகளை தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜப்பானிய மொழியில் மொத்தம் 8 ட்வீட்களை பதிவு செய்துள்ள அவர், அவற்றில் இரண்டில் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவையும் டேக் செய்துள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “ஜப்பானிய நண்பர்கள் பலர் நான் அந்நாட்டு மக்களுடன் ஜப்பானிய மொழியில் நேரடியாக தொடர்பு …

மேலும் படிக்க

“ஜன் தன்” வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் இன்று தொடக்கம்

ஏழைக் குடும்பங்களுக்கு தலா இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கும் “பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்டம்’ நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கப்படுகிறது. இதனையொட்டி, டில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம் சுமார் ஒரு கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நாளில் பிரதமர் ஆற்றும் உரையை 76 நகரங்களில் காணொலி …

மேலும் படிக்க

சன் குழுமம் கேபிள் டி.வி நடத்த அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சன் குழுமம், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான உரிமம் வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான தகவலை கடந்த 20ஆம் தேதி வெளியிட்டபோது, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி சன் குழுமத்துக்கு இந்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kal …

மேலும் படிக்க

நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை,  இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் …

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோவிலில்இன்று தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஆவணித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை, சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், சனிக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சுவாமிகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த …

மேலும் படிக்க