முக்கியசெய்திகள்

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி விபத்து: 20 மாணவர்கள் பலி

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற …

மேலும் படிக்க

பிரியங்கா சோப்ராவின் ‘மேரி கோம்’ படத்தின் அசத்தல் ட்ரெய்லர்

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரி கோம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. ஐந்து முறை ‘உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்’ பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம். உலக சாம்பியன் போட்டிகளில் ஆறு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவரே. கடந்த 2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றவர். இத்தகைய சிறப்பு மிக்க வீராங்கனையின் சுயசரிதையே இந்தியில் ‘மேரி கோம்’ என்ற சினிமாவாக …

மேலும் படிக்க

சமஸ்கிருத வாரம் ஏற்புடையது அல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

CBSC பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு, மத்திய மனித …

மேலும் படிக்க

MH17 மலேசிய விமான பயணியின் ஃபேஸ்புக் ‘ஜோக்’ நிஜமான சோகம்

கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் “ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்” எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் …

மேலும் படிக்க

மலேசிய விமானம் எரியும் வீடியோ:

நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ஏவுகணையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ஏவுகனையால் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற …

மேலும் படிக்க

மோடியின் விமானத்துக்கு குறி வைக்கப்பட்டதா? சுப்ரமணிய சுவாமி சந்தேகம்

பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இலக்கு வைக்கப்பட்டதோ என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் கிளப்பியிருக்கிறார். இது தொடர்பாக தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய எதிரிகள் இருப்பது ஒன்றும் ரகசியமானது அல்ல. அண்மையில்தான் பிரிக்ஸ் மாநாடு முடிந்தது. அம்மாநாட்டின் மூலம் சர்வதேச புவிசார் அரசியலில் உலக பொருளாதாரத்தில் கோலோச்சுகிற நாடுகளுக்கு சவால்விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டினால் ஓஐசியானது …

மேலும் படிக்க

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டனர் என்று உக்ரைன் அரசுத் தரப்பு கூறியுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு போயிங் 777 விமானம் சென்று …

மேலும் படிக்க

லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா

லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா ஜனநாயக நாடு என்றாலே அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்களாட்சி முறையில் அவர்கள் மூலம் அந்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை, தேவைகளை பெற்றுத் தருகிறது. அதுபோல பல்வேறு துறைகளில் பணியாற்றும் மக்கள் ஒன்றினைந்து ஒரு அமைப்பின் மூலம் இத்தகைய பணி செய்கிறார்கள் என்றால் அது வியக்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம் ஹெரிடேஜ் …

மேலும் படிக்க

ஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது

கூடுதல் நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதின. கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது …

மேலும் படிக்க