ஜப்பான் மொழியில் மோடி ட்வீட்

பிரதமர் ஜப்பான் செல்லவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய மொழியில் ட்விட்டரில் தனது கருத்துகளை தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜப்பானிய மொழியில் மொத்தம் 8 ட்வீட்களை பதிவு செய்துள்ள அவர், அவற்றில் இரண்டில் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவையும் டேக் செய்துள்ளார்.

இது குறித்து ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “ஜப்பானிய நண்பர்கள் பலர் நான் அந்நாட்டு மக்களுடன் ஜப்பானிய மொழியில் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அதனை ஏற்றே, ஜப்பானிய மொழியில் ட்வீட் செய்துளளேன். மொழியாக்கத்திற்கு உதவியவர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

எதிலும் வித்தியாசம் காட்டும் பிரதமர் இதிலும் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

Check Also

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *