ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய் உருக்கமான வேண்டுகோள்

ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க கோரி  உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவருக்கு அந்த அபலைத்தாய் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது கையில் எனது மகனின் உயிர் உள்ளது. அவனை, முகமது நபியின் வழித் தோன்றல் கலிபாவான நீங்கள் மன்னித்து உயிர் பிச்சை வழங்க வேண்டும். எனது குழந்தையை விடுவிக்கும்படி நான் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது தலைமை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனது உயிரைக் காக்கும்படி கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

Check Also

ஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா! டியுஜே கடும் கன்டனம்

14 – 02 – 2019 ஆளுநரை காப்பாற்ற பத்திரிகையாளர்களை தாக்கும் காவல்துறைக்கு டி.யூ.ஜே கடும் கண்டனம் ! – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *