மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இந்தியா எதிர்காலத்தில் விளையாடவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தீர்மானித்துள்ளது. இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டது சம்பந்தமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று …
மேலும் படிக்கவெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த இந்திய வீராங்கனை சரிதா
தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சரிதா தேவி, அதனை கழுத்தில் அணிந்து கொள்ள மறுத்துவிட்டார். மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்குடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஆக்ரோஷமாக செயல்பட்ட சரிதா தேவி தனது அதிரடி …
மேலும் படிக்கஆசிய விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்
ஆசிய விளையாட்டு மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார். 51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 5 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாய்னா ஷெகெர்பெகோவா என்பவரை 2-0 என்று வெற்றி பெற்றார்.
மேலும் படிக்கடென்னிஸ் மற்றும் வட்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10-வது நாளில், இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன. டென்னிஸ் ஆட்டத்தின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா – சாகேத் மைனேனி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா புணியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜெய்ஷா, மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் நவீன் …
மேலும் படிக்கவில்வித்தை மற்றும் ஸ்குவாஷில் இந்தியா தங்கம் வென்றது
இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இன்று நடந்த காம்பவுண்டு பிரிவு பைனலில், இந்திய ஆண்கள் அணி வலிமையான தென் கொரியாவை 227-225 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தியா சார்பில் சந்தீப் குமார், அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் அடங்கிய அணி பங்கேற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, முடிவில் 227-225 என்ற புள்ளிக்கணக்கில் தென் …
மேலும் படிக்கஎம்.எஸ்.தோணி படத்தின் பர்ஸ்ட் லுக்
எம்.எஸ்.டோணி – தி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. டோணியின் மனைவி சாக்ஷி இதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தோணி படம் போஸ்டர் வெளியானது முதல் ரசிகர்கள் பாராட்டினை அள்ளி குவித்து வருகின்றனர். தோணியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று “எம்.எஸ்.டோணி” என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரிக்கப்பட உள்ளது. பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த திரைப்படத்தில் சுஹாந்த் சிங் ராஜ்புத், தோணி …
மேலும் படிக்கஆசிய கூடைப்பந்து போட்டிகளில் ‘ஹிஜாப்’ சர்ச்சை: கத்தார் அணி விலகல்
தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாபை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற …
மேலும் படிக்கஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோஷல்
ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் …
மேலும் படிக்கஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலம் வென்றார் அபினவ் பிந்த்ரா
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று தனது தொழில்முறை துப்பாக்கி சுடுதல் போட்டியை நிறைவு செய்த அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்று தந்துள்ளார். தென்கொரியாவின் இன்சியானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியின் 4-வது நாளில் 10 மீட்டர் ஆண்கள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 6- ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்து …
மேலும் படிக்கஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெண்கலம் வென்றது
தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை சுவேதா சௌத்ரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தென் கொரியாவின் அதிபர் பார்க் ஜூன் ஹீ முறைப்படி, ஆசியப் போட்டியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபல நடிகை லீ யங், ஆசியப் …
மேலும் படிக்க