இந்திய கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் ஒருவர், இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன் ஆஜராக தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இரண்டு வாரங்களுக்கு ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்கரஷ்யா மீது புதிய பொருளாதார தடை? ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை
ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகுமென ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளை பொறுத்து புதிய பொருளாதார தடைகள் அமையும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லையெனில், …
மேலும் படிக்கபாகிஸ்தானில் பயங்கர கலவரம் – பிரதமர் அலுவலகம், அரசு டிவி அலுவலகம் சூறை
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்து, போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் கானும், தார் உல் காதிரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பாக கூடி தர்ணாவில் ஈடுபடும்படி தங்கள் கட்சி தொண்டர்களுக்கு …
மேலும் படிக்கஎபோலா வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு? கனடா விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலகையை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தடுப்பு மருந்து இல்லாமல் இருக்கிறது என்ற கவலையை கனடா நாட்டு ஆய்வாளர்கள் போக்கி இருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்த வைரஸ் கொல்லி மருந்து குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை வெற்றி அடைந்துள்ளதாக கனடாவை சேர்ந்த பொது சுகாதார ஏஜென்சி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகி உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்தி வருவது எபொலா வைரஸ். கனடாவின் பொது சுகாதார ஏஜென்சியை சேர்ந்த ஆய்வு …
மேலும் படிக்கமேற்கத்திய நாடுகளுக்கு விளாடிமிர் புதின் கடும் எச்சரிக்கை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் மற்ற நாடுகளுடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், தங்களிடம் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் அவர் ரஷ்ய ராணுவம் நவீன தொழில்நுட்பங்களுடன் வலிமைபெற்று வருவதாகவும் ராணுவ வலிமையில் தனது அரசு முழு கவனம் செலுத்தி வருவதகாவும் தெரிவித்தார்.
மேலும் படிக்கஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய் உருக்கமான வேண்டுகோள்
ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க கோரி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவருக்கு அந்த அபலைத்தாய் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது கையில் எனது மகனின் உயிர் உள்ளது. அவனை, முகமது நபியின் வழித் தோன்றல் கலிபாவான நீங்கள் மன்னித்து உயிர் பிச்சை வழங்க …
மேலும் படிக்கபோர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள். இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து நாடு களத்தில் இறங்கியது. இந்நிலையில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை …
மேலும் படிக்கஉலகின் முதல் தடவை முழுமையான உடல் உறுப்பு வளர்த்து ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் சாதனை
முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தகைய முயற்சி வெற்றி பெறுவது உலக அளவில் இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் தைமஸ் என்று அழைக்கப்படும் கழுத்துக்கணையம் என்பது உடலின் முக்கிய உறுப்பு. மனிதர்களுக்கு இது இதயத்துக்கு மேலே கழுத்துப்பகுதிக்கு கீழே அமைந்திருக்கும். இரண்டு பிரிவாக இருக்கும் இந்த கழுத்துக்கணையம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. காரணம் இந்த கழுத்துக்கணையத்தில் …
மேலும் படிக்கபில் கிளின்டனை அச்சுறுத்த முயற்சித்த இஸ்ரேல்?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடல்களை ரஷ்யாவும், பிரிட்டனும் ஒலிப்பதிவு செய்ததாகவும் அந்த ஒலிப்பதிவு நாடாவை இஸ்ரேல் பிரதமர் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாகவும் புதிய புத்தகம் ஒன்று உரிமை கோரியுள்ளது. ‘வீக்லி ஸ்டான்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் டானியல் ஹால்பரால் எழுதப்பட்ட ‘கிளின்டன், இன்க்’ என்ற நூலே இவ்வாறு உரிமைகோரியுள்ளது. மொனிக்கா …
மேலும் படிக்கஎபோலா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த பல மாதங்கள் தேவை! உலக சுகாதார அமைப்பு தகவல்
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த பல மாதங்கள் தேவைப்படுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக வைரஸ் பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநர் கெய்ஜி புகுடா எச்சரித்துள்ளார். இதனிடையே சியரோலியோனில், எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனை க்கு கொண்டு செல்லாமல் பாதுகாப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கினி, …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி