சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 73.67 சதவீதம் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% ஓட்டு பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான ஓட்டுக்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு % 1 திருவள்ளூர் (தனி) …
மேலும் படிக்கபெங்களூர்-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்(17235) இன்று ரத்து: நாகர்கோயில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ்(17236) நாளை ரத்து
பெங்களூர்:விஜயவாடா டிவிஷனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர்-நாகர்கோயில் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தங்களது கட்டண பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு தினமும் மாலை 5 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 17235) இயக்கப்படுகிறது. ஒசூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக இந்த …
மேலும் படிக்கவறுத்தெடுக்கிறது கோடை வெயில்: திருச்சியில் அதிகபட்சமாக 107 டிகிரி
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருப்பதா மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 105 பாரன்ஹீட்டும், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 95 …
மேலும் படிக்கதமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன:வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும். 2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. தற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. …
மேலும் படிக்கராஜீவ் காந்தி கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மாநில அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் …
மேலும் படிக்கஇன்ஜினியரிங் விண்ணப்பம் மே 3ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் – அண்ணா யுனிவர்சிட்டி
2014 ம் ஆண்டிற்கான பி.ஈ/பிடெக் படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 3 ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு http://online.annauniv.edu/tnea/dates.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். S.No Events Dates 1. Issue of notification inviting application for Admission to B.E./B.Tech. 02.05.2014 2. Issue of application forms 03.05.2014 3. Last date for issue of application form 20.05.2014 4. Last date for …
மேலும் படிக்கதமிழகத்தில் வாக்குப்பதிவு 70% – பிற்பகல் 5 மணி நிலவரம்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி, தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 79.32% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.84% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆலந்தூர் இடைத் தேர்தல் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு: தொகுதி காலை 9 மணி காலை 11 மணி மதியம் 1 …
மேலும் படிக்கசென்னையில் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத ஐ.டி நிறுவனங்களுக்கு சீல்:
சென்னை சோழிங்கநல்லூரில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி இன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட ஐ.டி.நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஐ.டி.நிறுவனங்களில் இன்று பணிபுரிந்து கொண்டிருந்த 3500க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றி தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நாளான இன்று அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறிய ஐ.டி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஐ.டி நிறுவன …
மேலும் படிக்கநெல்லையில் சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல்
தேர்தலையொட்டி நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக் கடையை இன்று மூடவில்லை. விடுமுறை விடப்படவில்லை. மேலும ஊழியர்களையும் வாக்களிக்கப் போகக் கூடாது என்று கூறியதாக தெரிகிறது இதையடுத்து ஊழியர்களில் சிலர் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் துணிக்கடையை மூடி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் படிக்கஇந்தியாவில் உயிர்களைக் காப்பாற்ற பயன்படும் வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்: “உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன. மார்ச் மாதம் வரை வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி