மலிவு விலை விமான டிக்கெட்: செயலிழந்த ஏர் இந்தியா வெப்சைட்

ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான ரூ.100 டிக்கெட்டை பெற மக்கள் முயன்றதால் அதன் இணையதளம் www.airindia.com செயல் இழந்தது.

இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ரூ.100க்கு விமான டிக்கெட் அளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த ரூ.100 டிக்கெட் முன்பதிவு இன்றில் இருந்து 31ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  டிக்கெட்டை முன்பதிவு செய்ய பொது மக்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்றனர். இப்படி ஒரே நேரத்தில் ஏராளமானோர் முந்தியடித்ததால் ஏர் இந்தியா நிறுவன இணையதளம் செயலிழந்தது.

இதனால் தற்போது டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஏர் இந்தியா இணையதளத்திற்கு சென்றால், சேவை இல்லை என அறிவிக்கிறது.

serv

இந்தியாவின் முக்கிய விமான சேவை எப்படி இணையதள சர்வரை வத்திருக்கிறார்கள் பாருங்கள். இதிலும் ஊழல் எதாவது இருக்குமோ?

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *