வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்தார். தற்போதைய விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று கூறியுள்ள அவர், மக்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் 12-ஆக அதே நிலையில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல்விலை குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பிரதான் கூறினார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், எண்ணெய் உற்பத்தி உயர்ந்தால் தான் அரசு மற்றும் மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள சுமை குறையும் என்றும் குறிப்பிட்டார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி