சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இரண்டு இளைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத நகராக இருந்த சிவகாசியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது பற்றி மக்கள் கூறுகையில், ஊரடங்கால் அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் நாங்கள் முழு ஒத்துழைப்பினை தந்து வந்தாலும், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
ஜெயகுமார், சிவகாசி.

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …