பள்ளிகள் சார்பாக சென்னை டிபிஐ வளாகம் முன்பு நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம் சார்பாக 21.09.2020 திங்கட்கிழமை, சென்னை டிபிஐ வளாகம் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்ததால் ரத்து

 • தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC) இல்லாமல் எந்த பள்ளியிலும் சேர்க்கக் கூடாது என்ற அரசானை வெளியிட்டு உடனே அமல்படுத்த வேண்டும்.
 • வழங்கப்படாமல் உள்ள கல்விக் கட்டண நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
 • தீயணைப்புத் துறை தடையின்மை சான்று.
  சுகாதார சான்று
  கட்டிட உறுதி சான்று
  கட்டிட உரிமை சான்று

  கொரோனா காலத்தில் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தமிழக அரசின் ஆணைப்பபடி எல்லா பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகாரம் வழங்கிட ஆணையிட வேண்டும்.
 • பழையபடி அங்கீகார ஆணைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களது திருக்கரங்களால் வழங்கிட வேண்டுகின்றோம்
 • இந்த கொரோனா காலத்திலாவது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை இலவசமாக வழங்கிட வேண்டுகின்றோம்.
  மேற்கண்ட கோரிக்கைகளை சிலவற்றை ஏற்பதாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக மாநில பொதுச் செயலாளர் திரு Dr. K.R. நந்தகுமார் அவர்கள் தெரிவித்தார்.
  இதனை தொடர்ந்து இன்று காலை 21.09.2020 பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அவர்களையும், பள்ளி கவ்வித்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்தது நன்றி தெரிவித்தனர்.
  இந் நிகழ்வில் இவருடன் மாநில தலைவர் பேராசிரியர் திரு. A. கனகராஜ் மாநில துணை தலைவர் ” ஜெம் ஆஃப் இந்தியா” திரு. Dr J.B. விமல் மாநில செயலாளர்( வழக்கறிஞர் பிரிவு) திரு. Dr P. சாரநாத், மாநில செய்தி தொடர்பாளர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Dr Ln லி. பரமேஸ்வரன் மாநில அமைப்பாளர் Dr S. ஜெரேமியா கிங்ஸ்லி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …