தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய முக்கிய செய்தி நீங்கள் அறிந்திருப்பீர்கள்…
தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை மூன்றாண்டுகள் தாருங்கள் என்றால் இரண்டாண்டு தருவதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்
அதேபோல் பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி, இருக்கை வரி போன்றவற்றை கேட்டு வற்புறுத்தி வசூலிப்பதையும்
நூறு சதவீதம் அபராதம் போடுவதையும் கைவிட வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
இதுவும் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
அதற்காக நாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குகள் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அப்பொழுது நமக்கு ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கி 2018-19 ஆம் ஆண்டிற்கான 40 சதவீதமும் சென்னை மாவட்டத்திற்க்கு இரண்டு ஆண்டுகளுக்கான 100 சதவீதம் மற்றும் அனைவருக்கும் 2019-20 ஆம் ஆண்டுக்குரிய 100 சதவீத கல்வி கட்டண பாக்கியும் அடுத்த வாரம் கிடைப்பதற்கான பணிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்து உள்ளது என்று நல்ல செய்தியை உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.
அதேபோல் நமக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை வட்டியுடன் சேர்த்து அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு அளிக்கிறதோ அந்த கட்டணத்தை தரக்கோரி வழக்கு தொடுத்து இருக்கின்றோம். நல்லதொரு தீர்ப்பு வரும் காத்திருங்கள் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைகளில் ஓடாமல் நின்று இருக்கிற பள்ளி வாகனங்களை அப்படியே உங்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோடு நமது கோரிக்கைகள் யாவும் நிறைவேறுவதற்கு இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாங்கள் கேட்பது மூன்றாண்டு அங்கீகாரம் நீங்கள் தருவதோ இரண்டாண்டு, அங்கீகாரத்தை மூன்றாண்டு ஆக்கி தாருங்கள். மேலும் அங்கீகாரம் பெற்ற 10 ஆண்டுகள் பழமையான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் தாருங்கள். நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள் ஆக்குங்கள்.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்விச் சட்டப்படி 2020-21 ஆம் ஆண்டுக்குரிய மாணவர் சேர்க்கையை செய்திட தனியார் பள்ளிகளுக்கு உடனே அனுமதி தாருங்கள்…
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி இலவச நோட்டுப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்
ஆன்லைனில் அங்கீகாரம் வழங்குவதை உடனே தொடங்கி 15 நாட்களில் தொடர் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்
தனியார் சுயநிதி பள்ளிக் கல்விக் கட்டணம் அதன் நிர்ணயக் குழு எட்டு மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் களுக்கும் கல்விக் கட்டணமாக நிர்ணயித்து தரவேண்டும். அதை விடுத்து கடந்த காலங்களில் கல்விக் கட்டண நிர்ணயக்குழு செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யாமல், பள்ளி நிர்வாகிகளை அழைத்து குற்றவாளிகளைப் போல் நிற்க வைத்து அலைக்கழிக்க வைத்து, குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதை கைவிட்டு நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து தர வேண்டும்.
தனியார் சுயநிதி பள்ளிகள் இயக்குனகரத்தை தொடங்கிட அரசு ஆணை போட்டும் இன்னும் கால தாமதம் செய்யாமல் உடனே தொடங்கி நடத்திடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
மேற்கண்ட நமது நியாயமான எல்லா கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றக் கோரியும் 22-07-2020 அன்று அனைத்து வகை மோட்டார் வாகனங்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
அரசு நினைத்தால் பள்ளிகளை திறந்து வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் நமது போராட்டத்தை விலக்கிக் கொள்ளலாம்.
அடுத்தடுத்து நாம் எடுக்கும் எல்லா
நல்ல முயற்சிகளும் என்றைக்கும் தனியார் பள்ளிகளின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கும் என்பதை உணர்ந்து இனிமேலாவது ஒன்று சேராதவர்கள் ஒன்று சேர வேண்டும். ஒன்று சேர்ந்த மாவீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என கூறியுள்ளார்