வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குமரி எல்லையில் அலைக்கழிப்பு MLA ஆஸ்டின் அவர்களிடம் முறையீடு…

வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்புபவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து குமரி எல்லையான களியக்காவிளை வழியாக தமிழ்நாடு நுழைகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எல்லையில் சோதனைகள் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தனியாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு 7 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்ற மாவட்டத்தை சார்ந்தவர்கள் பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அவ்வாறு நாடு திரும்புபவர்கள் மிகுந்த அலைக்கழிப்‌புக்கு உள்ளாக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அண்மையில் நாடு திரும்பிய கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லையில் காக்க வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தினமும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவு‌ம் கஷ்டப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

எம்எல்ஏ விட‌ம் முறையீடு

இந்நிலையில் சவுதியில் வசிக்கும் சுனில் என்பவர் காணொளி மூலம் கன்னியாகுமரி சட்ட மன்ற உறுப்பினர் திரு.S.ஆஸ்டின் எம்எல்ஏ அவர்களை தொடர்பு கொண்டு, வெளிநாட்டிலிருந்து கேரளா வழியாக வரும் மக்களின் துன்பங்களை எடுத்துரைத்தார். மேலும் மக்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் வெளிநாட்டில் இருந்து நமது மாவட்டத்திற்கு வரும்போது அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு காண வேண்டி கோரிக்கையும் வைத்தார்.

இது குறித்து பதிலளித்துள்ள எம்எல்ஏ அவர்கள், அதிகாரிகளிடம் பேசி உரிய முறையில் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …