தாய்ப்பாலின் மகத்துவம். இளம் தாயை காப்பாற்றிய நர்ஸ்…

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 17-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் 22 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் பிரசவத்திற்கு பிறகு திடீரென தாய்க்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்த போக்கை நிறுத்த மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தயாராகியுள்ளனர்.

இந்தநிலையில் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த நர்ஸ் தினேஷ்வரி கொடுத்த யோசனை அந்த இளம் வயது தாயை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளது. மருத்துவத்தில் தாய் பால் கொடுத்தால், ரத்தத்தில் ஆக்சிடாசின் சுரந்து, உடலில் ரத்தப்போக்கு நிற்கும் என கூறப்படுகிறது. இந்த யோசனையை தான் நர்ஸ் கூறியுள்ளார்.

இதையடுத்து டாக்டர்கள் நர்சின் யோசனையை முயற்சி செய்து பார்த்தனர். இதில் அந்த பெண் தனது குழந்தைகளுக்கு தாய் பால் கொடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு ரத்த போக்கு நின்றது. துரித யோசனையால் இளம் தாயை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றிய நர்சை டாக்டர்கள் வெகுவாக பாராட்டினர். அறுவை சிகிச்சை செய்து இருந்தால் அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை கூட அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கலாம் என டாக்டர் ஒருவா் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ‘‘நர்சிங் படிக்கும் போது ஆக்சிடாசின் பற்றி சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். அதை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தி உள்ளேன். இந்த முயற்சியால் கிடைத்த பலன் மகிழ்ச்சியை தருவதாக’’ 11 ஆண்டுகள் நர்சாக பணியாற்றி வரும் தினேஷ்வரி கூறியுள்ளார்.

Check Also

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …