‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு பங்கேற்கிறார்

தீபாவளிக்கு வெளியாகவுள்ள, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் இப்படத்தை இணைந்து தயாரிக்கும் ரமேஷ் பாபு, அமெரிக்காவில் உள்ள அர்னால்டு வீட்டில் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் ‘ஐ’ இசை வெளியீடு நிகழ்ச்சியில் தாம் கலந்துகொள்வதாக, அவரிடம் அர்னால்டு கூறியுள்ளார்.

இதனை உறுதி செய்யும் விதமாக, சென்னையில் நடைபெறும் ‘ஐ’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்துகொள்கிறார் என்று ஆஸ்கர் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *