போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, 15.08.2020 காலை 8.30 மணியளவில் , திருவள்ளூர் மாவட்டம், மணலி, எம்.எம்.டி.ஏ. 2 வது மெயின் ரோட்டில் மாவட்ட தலைவர் திரு. இதயாதுல்லா அவர்களது ஏற்பாட்டில் மாநில செயல் தலைவர் திரு. T.J. ஆனந்தன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மாநில கண்காணிப்பு குழு செயலாளர் திரு. P.K. மோகனசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி