ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திரமோடி

இந்திய கடற்படையின் மிகப் பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

கோவா கடல் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் போர்க்கப்பலில் வந்திறங்கினார். அவருக்கு, கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, விக்ரமாதித்யா போர்க் கப்பல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விவரித்தனர். மிக் 29 போர் விமானத்தில் அமர்ந்த பிரதமர் மோடி, இந்தியக் கடற்படையினரின் வலிமையை கேட்டறிந்தார்.

இதன் பிறகு நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், அதிகாரிகள் மத்தியில் பேசினார்.

modi10

ins vikra modi-ins1 modi-ship_650_061414052252

 “அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும். இதுவே, நாட்டுக்கு உறுதுணையாக அமையும். நாம் ஏன் ராணுவ தளவாடங்களை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? இந்தத் துறையில் நாம் தன்னிறைவு பெறவேண்டும். மற்ற நாடுகளுக்கு நம்மால் ராணுவத் தளவாடங்களை ஏன் ஏற்றுமதி செய்ய முடியாது?” என்று பிரதமர் மோடி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமாதித்யா போர் கப்பலின் – சிறப்பு அம்சங்கள்:

ரஷ்யாவில் ரூ.14,483 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட கப்பல் 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளம் 60 மீட்டர் உயரம் உடையது.

கப்பலின் மேற்பரப்பில் ஒரே நேரத்தில் 24 மிக் ரக போர் விமானங்களையும் 10 ஹெலிகாப்டர்களையும் நிறுத்தும் வசதி உள்ளது. 8000 டன்னுக்கும் அதிகமான எடையைத் தாங்கும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல், ஒரே நாளில் 13,000 கி.மீட்டர் தொலைவு பயணம் செய்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

போர்க்கப்பலில் மொத்தம் 1,600 பேர் பணியாற்ற முடியும். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ஒரு லட்சம் முட்டைகளும் 2 லட்சம் லிட்டர் பாலும் 16 டன் எடை அரிசியும் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எரிபொருள், உணவு, தண்ணீ ருக்காக கடற்படைத் தளத்துக்கு திரும்பாமல் சுமார் 45 நாள்கள் வரை கடலிலேயே சுற்றும் வகையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் உள்ளன.

ரஷ்யாவில் அட்மிரல் கோர்ஷ்கோவ் என்று பெயரிடப்பட்ட இந்த போர்க்கப்பல் இந்திய ராணுவ தேவைகளுக்கு ஏற்ப மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 60 சதவீத புதிய போர் தளவாடங்களுடன் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் பிரமாண்ட போர்க்கப்பல் உருவாக்கப்பட்டது.

modi-ship-1_650_061414052252

இந்தப் போர்க்கப்பலுக்கான ஒப்பந்தம் 2004-ம் ஆண்டே ஏற்படுத்தப்பட்டு 2008-ல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் இப்போது இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் ஏற்கெனவே ஐ.என்.எஸ். விராட் விமானந்தாங்கி போர்க்கப்பல் உள்ளது. பின்னர், 2-வது விமானந்தாங்கி போர்க்கப்பலாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கடற்படையில் இணைந்துள்ளது. இதில் இஸ்ரேலின் பாரக் ரக ஏவுகணைகள் பொருத்தப்படுகின்றன.

அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்களை கொண்டுள்ள நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

 

Check Also

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் அண்மையில் பேசுகையில் இந்திய ராணுவம் விரைவான, குறுகிய காலப் போருக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *