திருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு!

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 5 அஞ்சலகங்களில், விரைவில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக, திருப்பதி அஞ்சலக அதிகாரி சர்மா தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

அஞ்சலகங்களில் அஞ்சல்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல், பல மக்கள் நலப்பணிகளும் தொடங்கி சிறந்த முறையில் இயங்கி வருகிறது.

அதில், திருப்பதி தலைமை அஞ்சலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, சந்திரகிரி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் உள்ள அஞ்சலகம் என தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அஞ்சலகங்களில், ரயில்வே இ-டிக்கெட்டுகளை வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

கர்ணூல் மண்டலப் பகுதியில் உள்ள, மார்க்காபுரம், ஸ்ரீசைலம் அஞ்சலகங்களில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருப்பதி அஞ்சலகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், 5 அஞ்சலகங்கள் ரயில்வே இ-டிக்கெட் விற்பனை செய்தால் பக்தர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ரயில்வே துறையிடம் பேச்சு வார்த்தை நடத்த அஞ்சலக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், இதை முதன் முதலில் ஸ்ரீகாளஹஸ்தியில் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *