சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘Wi-fi’ வசதி: தொடங்கி வைத்தார் ரயில்வே அமைச்சர்

நாட்டிலேயே முதன் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னோடித் திட்டமாக ‘Wi-fi’ வசதியை ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ரயில்வே பட்ஜெட்டில் பயணிக ளுக்காக பல்வேறு வசதிகள் அறிவிக்கப் பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ‘ஏ-1’ மற்றும் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களில் ‘Wi-fi’ வசதி செய்து தரப்படும் என்பதாகும்.

தமிழகத்தில் உள்ள ‘ஏ-1” வகை ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகியவற்றில் ‘Wi-fi’ வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முன்னோடித் திட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘Wi-fi’ வசதியை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று தொடங்கி வைத்தார்.

இதுபோல, தெற்கு ரயில்வேயில் ‘ஏ” வகை ரயில் நிலையங்களான விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகியவற்றிலும் ‘Wi-fi’ வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Check Also

திருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு!

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 5 அஞ்சலகங்களில், விரைவில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக, திருப்பதி அஞ்சலக அதிகாரி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *