தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 ஆம் ஆண்டு விழா!

தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 வது ஆண்டு விழா 24.10.19 வியாழக்கிழமை, மாலை 7 மணியளவில், சென்னை இராயபுரம் சோமு தெருவில் உள்ள அவ்வை கலைக்கழகத்தில்( ஏ/சி) சங்க தலைவர் திரு. P. நாகலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் திரு. M. தேவநாதன், பொருளாளர் திரு. S. நளபோஸ் வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு‌. MJF Ln Dr.M. நாகராஜன், திரு. M.K.ராஜா, திரு. A.S. அன்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதற்கிடையில் சங்க உறுப்பினர்கள் சார்பாக இந்திய நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பேசிய தலைவர் அவர்கள், சங்கத்தின் பெயரை மாற்றிய விதம் பற்றியும், சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நம் வளர்ச்சி என்பதை யாரும் தடுக்க முடியாது என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அது மட்டுமல்ல இனி வரும் காலங்களில் நமது சங்க ஆண்டு விழா ஒவ்வொரு ஜீன் மாத முதலாம் வாரத்தில் பிரம்மாண்டமாய் நடைபெறும் என்றும் வரும் 2020 ஆண்டில் உறுப்பினர்கள் அனைவருக்கும் டைரி வழங்க இருப்பதால் அதற்காக முழு ஒத்துழைப்பினையும் தர கேட்டுக் கொண்டார்.

வணிக நல வாரியம் மூலம் மறைந்த சங்க உறுப்பினர் குடும்பத்திற்கு ரூபாய். ஒரு லட்சம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உறுப்பினரகள் அனைவருக்கும் சங்கம் பெயர் பதித்த ஷீல்டு அவர்களுக்கு (நிறுவன பெயர் மற்றும் நிறுவனர் புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட) வழங்கப்பட்டது.

இதனை துணை தலைவர்கள் திரு. S.S. சுந்தரம், திரு. S. சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். நன்றியுரையை திரு‌ M. தேவநாதன் நிகழ்த்த வருகை தந்த அனைவருக்கும் ” சிறப்பு இரவு உணவினை” வழங்கி சங்க நிர்வாகிகள் உற்சாகப்படுத்தினர்.

“ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …