ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு: தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி.

18 வருடமாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி பரபரப்பு தீர்ப்பு , வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு.

ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. இதைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். விரிவான தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது எனத் தெரிகிறது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியையும் இழக்கிறார்

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் 2வது முறையாக அவரது முதல்வர் பதவி பறிபோய்விட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒ.பன்னீர்செல்வமே முதல்வராவாரா? அல்லது வேறு யாராவது தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி. நத்தம் விஸ்வநாதன், ராஜ்யசபா எம்.பிக்கள் ரபி பெர்னாட், நவநீதகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயில் பார் ஜெயலலிதா: ட்விட்டரில் சுப்ரமணிய சாமி விமர்சனம்.

சுப்ரமணியசுவாமிக்கு  செருப்படி சென்னையில்  அதிமுகவினர் சுப்ரமணிசுவாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். சுப்ரமணியசுவாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.

திமுக வரவேற்பு:

திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இந்த் தீர்ப்பிற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இத்தீர்ப்பின் மூலம் நீதி காப்பாற்றப் பட்டுள்ளது. அதிமுக அரசின் தோல்விகளை நாங்கள் மக்களிடத்தில் எடுத்துச் செல்வேம். ஆனால், தீர்ப்பை முன்னிறுத்தி திமுக பிரச்சாரம் செய்யாது’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உருவபொம்மை எரிப்பு:

தமிழகத்தின் சில இடங்களில் அதிமுகவினர் போராட்டம் மற்றும் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது என திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check Also

​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *