யூடியூப் இணையத்தில் ரியல்வொர்க் மீடியா வழங்கும் ரணதீரன் என்ற ட்ரைலர் வெளியாகியது. இந்த ட்ரைலர் ரஜினி, தீபிகா படுகோனே என கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. இது கோச்சடையான் 2-ம் பாகம் என இணையம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதை அறிந்த சௌந்தர்யா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். காரணம் கோச்சடையான் இரண்டாம் பாகம் அவரே இன்னும் இயக்கும் முடிவில் இல்லை, அப்படி இருக்க யார் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியிட்டிருப்பார்கள் என்ற கேள்வி தான் அது.
இந்த ட்ரைலரை வெளியிட்டது கோவையை சேர்ந்த ரியல்வொர்க் மீடியா என்ற நிறுவனம் தான். இவர்களின் சொந்த முயற்சியில் உருவான ப்ளெண்டர் என்ற சாப்ட்வேர் மூலம் இந்த ட்ரைலர் கட்சிகளை உருவாக்கியுள்ளனர். இந்த சாப்ட்வேர் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. மாயா போன்ற பெரிய சாப்ட்வேர்கள் இல்லாமல் இந்த ட்ரைலரை ப்ளெண்டர் மென்பொருளை பயன்படுத்தி அதுவும், கோச்சடையான் படத்தை விட சிறப்பாகவே உருவாகியுள்ளனர். தங்களுடைய மென்பொருளின் விளம்பரத்திற்காவே இந்த ட்ரைலரை உருவாக்கியுள்ளனர்.
இந்த மென்பொருள் மூலம் கோச்சடையான் படத்தை தயாரித்திருந்தால் செலவு பாதியாக குறைந்திருக்குமாம். கோச்சடையான் படத்தை இயக்கிய சௌந்தரியாவே இவர்களுடைய ட்ரைலரை பார்த்து வாயடைத்து போய் உள்ளார். தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தை கலக்கிகொண்டிருக்கும் செய்தி இது தான்.
புதிதாக வித்தை காட்டுகிறேன் என்ற பெயரில் தமிழ் சினிமாவை வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்களிடம் அடகு வைத்து, ஆப்பு சொருகிக்கொண்ட சௌந்தர்யாவிற்கு, கோவை நிறுவனத்தினர் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.