மாயமான அல்ஜீரிய விமானம் ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் பகுதியில் விபத்துக்குள்ளாகியது #AH5017

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 116 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவின், வாகடூகு அருகிலுள்ள புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து அல்ஜீரியா தலைநகரின் ஹொவாரி விமான நிலையத்திற்கு செல்லும் ஏர் அல்ஜீரிய விமானம் ஒன்று புறப்பட்டது. இதில், 110 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் பறக்கத் துவங்கிய 50 நிமிடங்களுக்கு பிறகு விமானியுடனான தகவல் தொடர்பையும், ராடாரில் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. விமானம் 4 மணி நேரத்திற்கு பிறகும் அல்ஜீரியாவுக்கு சென்று சேரவில்லை.

இதையடுத்து, கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், அந்த விமானம் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதாகவும், அதில் பயணம் செய்த 116 பேரும் பலியாகிவிட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Check Also

குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….

மத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக …

Leave a Reply

Your email address will not be published.