கோச்சடையான் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் மைசூர் பகுதி உள்பட பல இடங்களில் நடந்தது. படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி காந்தின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் 12ந்தேதி “லிங்கா” திரைப்படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி