பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரி கோம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. ஐந்து முறை ‘உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்’ பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம். உலக சாம்பியன் போட்டிகளில் ஆறு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவரே. கடந்த 2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றவர்.
இத்தகைய சிறப்பு மிக்க வீராங்கனையின் சுயசரிதையே இந்தியில் ‘மேரி கோம்’ என்ற சினிமாவாக உருவெடுத்துள்ளது. இதில் மேரி கோம் ஆகவே மாறி இருக்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. சஞ்ஜய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படத்தை ஓமங் குமார் இயக்கியிருக்கிறார்.
திரைப்பட உலகில் ஒரு நடிகையை இன்னொரு நடிகை பாராட்டுவது அரிது. மேரிகோம் படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் ஆகியவற்றைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். அனுஷ்கா ஷர்மா, அலியா பட், பிபாஷா பாஷூ, ப்ரீத்தி ஜிந்தா, மாதுரிதீட்சித் என பலரும் பிரியங்காசோப்ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேரி கோம் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி