சென்னையில் சில மணி நேரம் பெய்த மழையால் அனைத்து சாலைகளும், மழை வடிகால் சரியாக இல்லாத காரணத்தால் மழை நீரால் நிரம்பியது. இதனால் சாலைகள் சரியாக தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.
பாதசாரிகளும் சாலைகளில் எங்கே பள்ளம் இருக்குமோ என தடுமாறி தான் சென்றனர்.
வடகிழக்கு பருவ மழை வரும் போது மட்டும்தான் அரசு விழித்துக் கொண்டு பணி செய்கிறது. இந்த பணியினை அதற்கு முன்னரே செய்யாமல் இருப்பதேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில், மழையால் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ள ஓமந்தூரர் அரசு மருத்துவமனை, ஜெமினி மேம்பாலம் உள்ளிட்ட அண்ணாசாலை பகுதிகளில் “ஜெட் பேட்ஷர்” என்ற நவீன இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் துவங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த இயந்திரத்தை வைத்து சாலையில் ஈரமான இடத்தை வெபப்படுத்தி அதில் தார் கலவையை செலுத்தி சீர்படுத்தப்படும். இதனால் பள்ளமான இடங்களில் கட்டிட இடிபாடுகளை கொட்டி காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
இந்த வகையில் நம் நெடுஞ்சாலை துறை சுறு சுறுப்பாக இறங்கிய வேளையில், சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சாலைகள், தெருக்களை இதே பாணியில் இறங்கி சீர்ப்படுத்தி தர வேண்டும் என்பதே சென்னை மக்களின் ஆசை. நிறைவேற்றி வைப்பார்களா…
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்