சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா

சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி இன்று ஆகஸ்டு 3, 2019, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் ” மாபெரும் அன்னதானம்” வழங்கப்பட்டது.

PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக திரு. Ln. C.H.சண்முகம், (தலைவர், Lions Club of Royapuram Heritage), PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் சிங்கம்” திரு. Ln. C. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், நுங்கம்பாக்கம் பகுதி வாழ் பிரமுகர்கள், PPFA, அரிமா நண்பர்கள், பொதுமக்கள் வருகை தந்து அம்மன் அருளை பெற்று அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒளிப்பதிவு: ” ஜீனியஸ்” K. சங்கர்

படத்தொகுப்பு: அமுரா

Check Also

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் …