பொங்கல் திருவிழா – வடசென்னை நாடார் பேரவை சார்பில் தைப்பொங்கல் திருவிழா!

வடசென்னை நாடார் பேரவை சார்பில் தைப்பொங்கல் திருவிழா இராயபுரம் மரகதம் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடார் பேரவை தலைவர் திரு. எர்ணாவூர் A. நாராயணன் Ex. M.L.A., அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நிகழ்வுக்கு வருகைத் தந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு புடவை, கரும்பு, அரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்பினை வழங்கி சிறப்புறையாற்றினர்.

குமரி மாவட்டத்தில் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டதை வேதனையுடன் பகிர்ந்தவர், இந்நிலையில் நம் முதல்வர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதாக சொன்னது எப்படி என கேள்வி எழுப்பினார்.

டிடிவி தினகரன் அவர்களை பற்றி குறிப்பிடுகையில் கடன் சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற ஒரே நபர் இவராக தான் இருக்க முடியும் என்றவர், தன் ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு அரசால் கிடைக்க்கூடிய சலுகைகளை காலந்தாழ்த்தாமல் பெற்று தர முழு முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியினை வடசென்னை மாவட்டம் நாடார் பேரவை சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஜீனியஸ் கே. சங்கர்

Check Also

சிங்காரத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் & கார்மெண்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 26-03-2014 அன்று நடைபெற்ற …